ஒர் ஆய்வின் இறுதிப் பத்திகள் பின்வருமாறு முற்றுப் பெறுகின்றன.
‘மரணத்தின் விரிந்த கிளைகளில் உறக்கம் துயில் கொள்வதாகவும் அது அஸ்தமனத்தின் பிந்திய கருக்கலில் மனிதனுடன் சேர்வதாகவும் சேர்மானம் வலுக்கும் போது அது மரணமாக ஜனிப்பதாகவும் சேர்மானம் வலுக்காத கிளை உறக்கம் பிரிகை கொண்டு மரணத்தின் விரிந்த கிளைகளில் சென்று துயிலத் துவங்குவதாகவும் அதனால் மனித சஞ்சாரத்தின் இருப்பு தொடர்வதாகவும் அதற்காகவே இறைவன் துதிக்கப்படுகின்றான் என்றும் இந்த ஸ்தோத்திரத்தின் (ஸ்தோத்திரம் ஆய்வின் முந்திய பத்திகளில் கூறப்பட்டுள்ளது) வியாக்கியானம் சொல்கிறது.
வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையே உறக்கம் துலங்காத பிரிகோடாக வரையப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அது வாழ்வுடன் பிணைந்து கொள்ள செய்யும் பிரயத்தனங்களில் முடிச்சு அவிழும் பிணைப்புகள் வாழ்வாக ஜனிப்பதாகவும் உறக்கம் மரணத்தின் கிளைகளில் சாந்தி கொள்வதாகவும், ரௌத்தரம் கொண்ட அதன் பிரயத்தனங்களின் முடிச்சுகள் சிலபோது சாத்தியப்பட்டு விடுவதாகவும் அதன் ஜனனமும் மரணமே என்றும் அந்த ஸ்தோத்திரத்தின் மற்றுமொரு வியாக்கியானம் சொல்கிறது."
“துயிலை ஆசுவாசப்படுத்தி அதனை மரணத்தின் கிளைகளில் மீளவும் சாந்தி கொள்ளச் செய்யும் சர்வலோகத்து அதிபதிக்கு புகழாரம்.”
முற்றும்.
இந்த ஆய்வினை சர்வதேச வாசகர்களாகிய எமக்கு விட்டுச் சென்றுள்ள 'பின் டீன் பைசு' அவரது நாளேடுகளில் இந்த ஆய்வுக்குறிப்புகளை அட்சரங்கள், இலக்கங்கள் மற்றும் கோடுகளின் துணைகொண்டு குறித்து வைத்துள்ளார். தனது ஆய்வினைப் பூரணப்படுத்திவிட்டதாக எண்ணம் கொண்டு உசாத்துணையாகாத குறிப்புகளை எரிப்பதற்கு முன் மேலோட்டப் பார்வையொன்றை அவற்றின் மீது செலுத்தினார். தனது ஆய்வின் முற்றுகையினை கேள்விக்குள்ளாக்குவதோடு அதனை வேறுபரிமாணத்துக்கு இழுத்துச் செல்லும் மற்றுமொரு குறிப்பு இருக்கக் கண்டார். குறிப்புகளை கோர்வை செய்கையில் தான் அலட்சியமாக இருந்ததை எண்ணி தன்னை நொந்து கொண்டார்.
மரணம் தழுவிக்கொள்ளாத உறக்கம் பற்றிய துணுக்குகள் அவரது பார்வையை விட்டு நழுவிச்சென்றுள்ளதை எண்ணி கவலை கொண்டார். அந்த குறிப்புகளை தான் எங்கிருந்து பெற்றார் என்ற ஞாபகங்களை மீட்பது அவருக்கு கஷ்டமாக இருந்தது. அவை வேத நூல்களில் கிடைக்கலாம் என்று அவரது நண்பர் ஒருவர் அவருக்கு சொன்னது நினைப்புக் கொள்ளவே வேதநூல்களின் பக்கங்களில் தனது முடிவுறாத ஆய்வினை முழுமை பெறச் செய்யும் வைராக்கியத்துடன் தேடலானார். கி. பி 600 களின் பிற்பகுதிகளில் தோல், மரப்பட்டைகள், மிருகங்களின் எண்புகள் என்பவற்றில் சுவடுகளாகப் பதியப்பட்ட அறபானிய வேதநூலான புர்கானில் அக்குறிப்புகள் விரவிக் கிடப்பதாக அறிந்து அதனை தேடிப்படிக்கலானார். சுழிவுகள் கொண்ட அறபானிய அக்ஷரங்கள் அவரை புது உலகங்களுக்கு அழைத்துச் செல்வதான உணர்வு மேலிட்டது.
நாட்கள் செல்லச் செல்ல புர்கான் அவரை வசீகரம் செய்து கொண்டே வந்தது. அதனை படிக்கப்படிக்க அதன் வசீகர சக்தி கூடிவருதாக அவர் எண்ணினார். அறபானிய மொழியில் அமைந்த புர்கானின் அர்த்தங்கள் கிளைவிட்டு விரிந்து போவதை அவர் கண்டுகொண்டார். புர்கானின் இந்தியப் பதிப்பு ஒன்றினை புத்தகக்கடையொன்றில் கண்டு அதனை பணம் கொடுத்து வாங்கும்போது புத்தகக்கடை உரிமையாளன் அதன் ஒரு அக்ஷரத்தினை படிப்பது பத்து நன்மைகளை தருவதாக இறைதூதர் சொல்லியுள்ளதாக கூறினான். அதனை விளக்கவுரை ஒன்றின் துணையுடன் வாசிக்குமாறும் அவன் ஆலோசனை கூறினான். கூடவே வரலாற்றாசியர் பின் கஸீர் என்பவரின் பல பாகங்கள் கொண்ட விளக்கவுரை ஒன்றைக் அவரிடம் தந்துவிட்டு புர்கானின் வியாக்கியானம் எல்லையற்று விரியக்கூடியது என்றும் அதனை ஏழுகடல்களை மையாக்கி, உலகில் கிளைத்துப் பரம்பி நிற்கும் மரங்களை ஏழுத்தானியாக மாற்றினாலும் அதற்கான வியாக்கியானத்ததை எழுதித் தீர்த்துவிட முடியாது என்று சொல்லிச் சென்றான்.
மரணம் தழுவாத உறக்கம் ஒலிப்பிரிகைகளின் தாக்கம் கொள்ளாதது. அது செவிப்புலனை அர்த்தமற்றதாக்கிவிடுகிறது. அது மனிதனை இறுகத் தழுவிக் கொள்ளும்போது அந்த அரவணைப்பில் தாயின் பாசம் கசிவதால் எவரும் அபயமளிக்கப்பட்வர்களாக ஆயாசம் கொண்டு துயில் கொண்டுவிடுகின்றனர். மரணம் தழுவாத உறக்கம் தழுவியவர்களை மண் கூட புசிப்பதில்லை என்றும், இறை அனுக்கிரகம் கிடைக்கப்பெற்ற சில யுவர்களும் ஒரு காவல் நாயும் மாத்திரமே இது கால வரை அவ்வுறக்கத்தை சுகித்தவர்கள் என்று கூறும் பின் கஸீரின் குறிப்புகள், அவர்கள் மூன்று சகத்திரங்களுட்பட மேலும் பத்துக்குறைய நூறு ஆண்டுகள் துயில் கொண்டதாகவும் துயில் கலைந்து கண் விழித்தபோது தாம் களைப்பு மேலிட்டு ஒரு சில நாட்கள் வரை அயர்ந்து தூங்கிவிட்டதாக தமக்குள் வியந்து பேசிக் கொண்டதாகவும் அவர்கள் பற்றிய சேதி வெளியில் கசிந்து உலகமே வியந்து நின்ற ஒரு பொழுதுகளில் அவர்கள் தாம் துயில் கொண்ட குகையினுள் சென்று மறைந்து கொண்டதாகவும் அதன் பின் அவர்கள் திரும்ப வரவேயில்லை என்றும் குறிப்புகள் கூறுகின்றன.
இவ்வாறான அநுக்கிரகம் அந்த யுவர்களுக்கு கிடைத்ததன் சூட்சுமத்தினை அறிய ஆவல் மேலிட்டு புர்கானை மேலும் வாசிக்கலானார். பல வருடங்களாக அதனை மீட்டி மீட்டி வாசிப்பதிலேயே காலம் கழித்தார். மரணமும் வாழ்வும் புர்கானில் பக்கங்களில் சிதறவிடப்பட்டிருப்பதனையும் ஆனாலும் அவை எப்போதும் சேர்ந்தே இருப்பதுவும் கண்டு 'வாழ்வும் மரணமும் பூமியல் சிதற விடப்பட்டிருப்பதாகவும் அதில் தடுக்கிவீழ்பவர்கள் ஜனனத்தையும் மரணத்தையும் கண்டு கொள்வதாகவும், ஒரு புதிய தகவல் துணுக்கினை தனது குறிப்புகளில் சேர்த்துக் கொண்டார். தன் வாழ்நாளின் அந்திமக் காலம் வரை மரணம் தழுவாத உறக்கம் ஒரே ஒரு இடத்தில் புர்கானில் இடம் பெறுவதன் சூட்சுமம் அவருக்கு பிடிபடவேயில்லை. அவர் எழுதிய முற்றுப்பெறாத ஆய்வினை புதிய தகவல்களுடன் இணைத்து வெளியிட அவரால் முடியாமல் போய்விட்டது. அவர் புர்கானை ஆய்வு செய்து கொண்டிருந்த காலங்களில் மக்கள் அவரை மறந்துவிட்டிருந்தனர். அவரது மரணம் பற்றிய செய்திகள் கூட உறவினர்கள் வரை மட்டுமே தெரிந்திருந்தது.
'பின் டீன் பைசு' கடைசி வரை தன்னுடன் வைத்திருந்த குறிப்புப் புத்தகத்தினை படிப்பதற்கு யாரும் இல்லாதபடியால் அதனை நூதன சாலையின் கையெழுத்துச் சுவடிக் கூடத்துக்கு அவரது உறவினர்கள் தந்திருந்தனர். அது மறு பதிப்புப் பெறுவதற்கான முஸ்தீபுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அவரது குறிப்புப் புத்தகத்தின் கடைசிப்பக்கங்களில் மரணம் தழுவாத உறக்கம் என்ற வார்த்தைகள் பல தடவைகள் ஸ்தோத்திரம் போன்று எழுதப்பட்டிருப்பதும் அதன் இறுதியில் நடுக்கம் கொண்டம் கைகளால் எழுதப்பட்ட குறிப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டன. முழுமை பெறாத அவரது ஆய்வின் இறுதி வாசகங்களாக அவை இருக்கக் கூடும்.
“.......மரணம் தழுவாத உறக்கம் ஒரு வாசிக்கப்படாத புத்தகம். அது வாசிக்கப்பட வாசிக்கப்பட வாழ்வின் பல பரிமாணங்களும் அதன் நிலையற்ற தன்மையும் புரியப்படுகின்றது. அதன் வாசிப்பின் எல்லையில் சுகந்தம் தரும் உண்மை ஒன்று இருப்பதனை யாரும் புரிந்து கொள்வர். மரணம் தழுவாத உறக்கம் என்ற நூல் வாசிக்கப்பட வாசிக்கப்பட உறக்கம் நீங்கிய வாழ்வு பிறக்கிறது அதுவே மரணம் தழுவாத வாழ்வாக உருக்கொள்கிறது.

4 comments:
இணையத்தில் கதைக்கத் தொடங்கியதற்கு வாழ்த்துக்கள் றமீஸ்.
இஸ்லாம், அல்குர்ஆன் என்பவற்றுக்கும் மொழிக்குமான தொடர்புறுத்தல் முறையானது ஆன்மீகச் சொற்கள்,போதனை விளக்கங்கள், உபந்நியாச உரைகள், சும்மா கதை சொல்லுதல்களாக மட்டுமே இருந்து வந்திருப்பதைத் தாண்டி அவற்றை நவீன மொழியாகவும், அதி கதையாடல்களுக்கான பெரும்பரப்பாகவும் இந்தக் கதையில் வாசிக்கக் கிடைப்பது ஒரு புதுத் தரிசனமாகவே இருக்கிறது.
தொடர்ந்தும் எழுதுங்கள்.
அதிகதைகள் தளம் மிகவும் சுவாரசிமாகது. அது சலிப்பின்றி வாசிக்கத் தூண்டுவது என்பது என்து அநுபவம். ஏஸ் ராமகிறிஸ்னனின் கதைகளே எனக்கு துண்டுகோலாய் அமைந்தவை. இக்கதை மொழி விரித்து நிற்கும் உலகம் விசித்திரமானது வெறும் கற்பனை மட்டுமே சாத்தியப் பட்டு நின்ற இக்கதைத் தளத்தில் பௌதீக அதீதவியல் பற்றிய எண்ணக்கருக்களை இணைத்துச் செல்வது சாத்தியமா என்ற முயற்சியே இது.
விளங்க முடியாத அதிகதைகள் என்ற பயத்துக்கு அப்பால் அசரீரி இவற்றின் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டிருப்பது இன்னும் கதைப்பதற்காகன தைரியத்தை தருகிறது.
எதுவும் சரியான புரிதலின்றி வெல்லப்படுவதில்லையல்லவா?
உண்மைதான் ரமீஸ் என்னைப் பொறுத்தவரை கதை மீதான புது அனுபவங்கள் நீங்கள் அறிமுகம் செய்து வைத்த எஸ்.ராமகிறிஸ்னன் போன்றோரின் கதை வாசிப்பிலிருந்தே ஆரம்பித்தது என்பதே உண்மை.
அதற்குப் பிறகு "மரணம் மற்றும்.." என்னும் கன்னட சிறுகதைத் தொகுதி, "மகாராஜாவின் ரயில் வண்டி" போன்ற பல தொகுப்புகளுடனான உறவும் வேறு வேறு புது உலகங்களோடு சங்கமிக்கச் செய்யும் கதைகளை வாசிக்க வழிசெய்தன.
//விளங்க முடியாத அதிகதைகள் என்ற பயத்துக்கு அப்பால்//
நித்திய புறப்பாட்டில் தெளிவாகவே சொல்கிறீர்கள்தானே றமீஸ்
'மனிதர்கள் தாம் அறியாதவற்றின் எதிரிகள்' என்ற உண்மையை!!
Post a Comment